மாத ராசிபலன் 
வழிபாடு

2026 ஆவணி மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உச்சம் பெற்று அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். 'அஷ்டமத்து குருவாக இருக்கின்றதே' என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. எனவே பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். இருப்பினும் உடல்நலனில் மட்டும் அதிக கவனம் தேவை. குரு பகவானை தொடர்ந்து வழிபட்டு வருவதன் மூலம் எதிர்காலம் இனிமையாக அமையும்.

சிம்ம - புதன்

ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தொழில் ஸ்தானாதிபதியான அவர், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் வெற்றி கிடைக்கும். அருளாளர்களின் ஆலோசனையும், அனுபவஸ்தர்களின் அறிவுரையும் அவ்வப்போது கைகொடுக்கும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் இருந்த தாமதங்கள் அகலும். அரசு சம்பந்தப்பட்ட வகையில் ஏதேனும் விண்ணப்பித்திருந்தால் அதில் அனுகூலம் உண்டு.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக் கிரகம் ஆவார். எனவே அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதாரத்தில் சிறு சிறு தடைகள் ஏற்படும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றமோ, இலாகா மாற்றமோ வரலாம். பிறரை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். குடும்ப பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். கொடுக்கல் வாங்கல்களில் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

மாணவியருக்கு மறதி அதிகரிக்கும் என்பதால் கவனம் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாற்றப்பட்ட பொறுப்புகளால் மகிழ்ச்சி கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், கடுமையான போட்டிக்கு இடையே முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சி பலன்தரும். மாணவ தேவை. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

மகரம்

மகர ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி 3-ம் இடத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அதே நேரம் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே மனக்கசப்புகள் மாறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். கல்யாண முயற்சிகள் கைகூடும். தொழில் போட்டிகள் அதிகரித்தாலும், அதற்கு மத்தியிலும் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனிக்குரிய வழிபாட்டை முறையாக செய்தால் தடைகள் அகலும்.

சிம்ம - புதன்

ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத நல்ல மாற்றங்கள் வந்துசேரும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் திட்டமிடாமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் மற்றும் பிரபலமானவர்களின் பழக்கத்தால், தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். துணிந்து எடுத்த முடிவுகளால் மற்றவர்களை ஆச்சரியப்படச் செய்வீர்கள். கல்வி, கலை சம்பந்தமாக ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். தக்க சமயத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பும், தாராள மனம் படைத்த உறவினர்களால் பொருளாதார உதவியும் கிடைக்கும்.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானாதிபதியான அவர். தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ் காலத் தேவை பூர்த்தியாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒருநல்ல காரியத்தை முடித்து வைப்பீர்கள். முக்கியப் பிரமுகர்கள் உங்கள் இல்லம் தேடிவந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். பொதுநலனில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு தள்ளிப்போன ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். மாணவ - மாணவியருக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே குடும்பச் சுமை கூடும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம். உடல்நலனிலும் கவனம் தேவை. பொதுவாக உங்கள் ராசியில் ராகு இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகலாம். இருப்பினும் குருவின் பார்வை இரண்டாம் இடத்தில் பதிவதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு தல வழிபாடுகளை மேற்கொண்டால் மேலும் நன்மையைப் பெறலாம்.

சிம்ம - புதன்

ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் இப்பொழுது சப்தம ஸ்தானத்தில் சஞ் சரித்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே படித்து முடித்தும் வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளுடைய படிப்பு சம்பந்தமாகவோ, வேலை சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் ஏற்படும். புதியவர்கள் அறிமுகமாகி பொருளாதாரநிலை உயர வழிவ குத்துக் கொடுப்பர். திருமால் லட்சுமி, அனுமனை வழிபடுவதன் மூலம் இக்காலத்தை இனிய காலமாக அமைத்துக்கொள்ள இயலும்.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்தில் வரும் பொழுது நல்ல பலன்கள் அதிகம் நடைபெறும். பெற்றோரின் உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வாக்கு மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து செயல்பாடுகளில் வெற்றியைத் தேடிக்கொடுப்பார். பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு வியப்பர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வருமானம் உயரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவியருக்கு, ஆசிரியரின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு குடும்ப முன் னேற்றம் உண்டு. பிள்ளைகளின் வழியில் சுபகாரியங்கள் முடிவாகும்.

மீனம்

மீன ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உங்கள் ராசியிலேயே சனி வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். ஜென்மச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆதாயம் தரும் தகவல்கள் வந்துசேரும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். விரயத்திற்கேற்ற வருமானம் உண்டு. வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் வாய்ப்பு உண்டு.

சிம்ம - புதன்

ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்தில் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். உங்களை விட்டு விலகிஇருந்த உறவினர்கள் இப்பொழுது வந்திணைவர். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு சில முக்கியக் காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்த பகை மாறும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு மாறி ஒற்றுமை பலப்படும்.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அஷ்டமாதிபதியான அவர், அஷ்டம ஸ்தானத்திற்கு வரும்போது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதுவரை வராமல் இருந்த பாக்கிகள் இப்பொழுது வசூலாகும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். 'வியாபாரம் நடக்கும் இடத்தை மாற்றலாமா? அல்லது வியாபாரத்தையே மாற்றலாமா?" என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அடமானம் வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு கிடைக்கும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். மாணவ -மாணவியருக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு எதிர் பார்ப்புகள் நிறைவேறும்.