பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், லாப ஸ்நானத்தில் லாபாதிபதி புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே லாபம் வருவதில் எந்த தடையும் இருக்காது. அதேநேரம் அஷ்ட மத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், வந்த தொகை மறுநொடியே செலவாகிவிடும். உடல் நலத்திற்காகவும் சிறு தொகையை செலவிடும் சூழல் ஏற்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய், மாதத் தொடக்கத்தில் தொழில் ஸ்தானத்திற்கு வரப்போகிறார். எனவே முடிக்கிடந்த தொழிலுக்கு நிறப்பு விழா நடத்தும் வாய்ப்பு உண்டு.
ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய் சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதி யான அவர், தொழில் ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். தொழில் வெற்றி நடைபோடும். வரவேண்டிய லாபம் வந்துசேரும். கூட்டுத்தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வது பற்றி சிந்திப்பர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் கடன் சுமை அதிகரிக்கக்கூடும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவைப்பீர்கள்.
கடக ராசியில் சஞ்சரிக்கும் சுகரன், ஆனி 21-ந் தேதி (5.7.2006) அன்று உங்கள் ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியில் அடியெடுத்து வைக்கும் வேளையில், எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பெண் வழிப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் வழியில் நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும்.
ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6.7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் ஒரு சில நன்மைகளும், சிய மனக்கசப்பான நிகழ்வுகளும் நடைபெறலாம். சனியின் மீது குருவின் பார்வை பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் வராது. இருப்பினும் உத்தியோக மாற்றமும், ஊர் மாற்றமும் வரலாம் உங்கள் ராசிக்கு 2 5, 10 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. எனயே குடும்பத்தில் செலவுகள் கூடுதலாக இருக்கும். விருத்தினர் வருகை உண்டு, வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீகள், பிள்ளைகளின் கல்யாண முயற்சியும், வேலைவாய்ப்புக்காக படுத்த முயற்சியும் கைகூடும். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம். இலாகா மாற்றம் உறுதியா கலாம். உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும் சனிக்கிழமை விரதமும், வழிபாடும் சகஜ நிலையை உருவாக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள், மேலிடத்தில் ஒப்படைத்த பொறுப்புகளை கவனமாகச் செய்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் இணக்கமாக நடத்துகொள்வர். சுலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனை களை தவிர்ப்பது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்-
ஜூன்: 16, 17, 22, 23, 26, 27, 2 ஜூலை: 9, 10, 11, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பராபவ வருட ஆனி மாதக் கிரசு நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தொழில் ஸ்நானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. இதனால் பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலத்தை பற்றிய பயம் விலகும். லாப் குருவின் ஆதிக்கத்தால் லாபம் வந்து கொண் டேயிருக்கும். புதிய பங்குதாரர்கள் இணைந்து, பொருள் வளம் பெருக வழிவகுத்துக்கொடுப்பர். ஆரோக்கியத் தொல்லை அகலும், உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அஷ்டமத்து செவ்வாய் மாறிய பிறகு மன நிம்மதி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
ஆனி மாதம் 5-ந் தேதி (19.6,2006) அன்று செவ்வாய், ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3. 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்லும்போது இடம். பூமியால் லாபம் கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். 'கடன் சுமையின் காரணமாக வங்கிய இடத்தை விற்று விட்டோமே என்று கவலைப்பட்டவர்களுக்கு. புதிய இடம் வாங்கும் யோகம் உண்டு பல நாட்களாக நடைபெற்ற பஞ்சாயத்து நல்ல முடிவிற்கு வரும் செவ்வாய் ரிஷபத்தில் சஞ்சரிக்கும்போது இதுவரை நடைபெறாத காரியங்கள் படிப்படியாக நடைபெறும் துணிவும், நன்னம்பிக்கையும் கூடும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால், உங்களின் எண்வங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன் ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செய்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வருவதால் வி யங்கள் கூடும். குடும்ப முன்னேற்றம் கருதி அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பர பொருட்களையும் வாங்குவதில் மகிழ்ச்சி காண்பீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை வாகன யோகம் உண்டு. பயனாங்கள் பலன் தருவதாக அமையும்.
ஆனி 31-த் தேதி (15.7.2026) அன்று மீன் ராசியில் மனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி. வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். 6ம் இடத்திற்கு அதிபதியானவர் வக்ரம் பெறுவதால் எதிரிகளின் தொல்லை குறையும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உந்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வர். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். மாற்று மருத்துவந்தால் உடல்நலம் சீராகும். உங்கள் ராசிக்கு 1, 4, 9 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. அதேபோல் குருவின் பார்வை எனி மீது பதிவதால். சனி பகலாவின் கடுமை குறைத்து, நன்மைகள் அதிகரிக்கும். குறிப்பாக குடும்ப ஒற்றுமை பலப்படும். உடன்பிறந்தவர்களின் திருமண காரியம் கைகூடும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு வெளிநாடு சென்று படிக்க விரும்பிய பிள்ளைகளுக்காக எடுத்த முயற்சி நிறைவேறும். உத்தியோகத்தில் வரும் இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும். அரசியல் கனத்தில் இருப்பவர்களுக்கு திடீரென நல்ல பொறுப்புகள் வந்துசேரும் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நிலையான வருமானமும், நிதிநிலையில் ஆதரவும் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. மாணவ மாணவிகளுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடிக்கடி பயணங்களும், அதனால் விரயங்களும் ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 18, 19, 25, 26, 29, 30, ஜூலை: 11, 12, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
பராபவ வருடம் ஆளி் மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே திடீர் திடீரென மாற்றமும், ஏற்றமும் வந்துசேரும். உடன்பிறப்புகளுக்கான திருமா முயற்சி கைகூடும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பதவி மாற்றம் திருப்தியாக அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள்.
ஆனி மாதம் 5-ந் தேதி (19/6:2020) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2. 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கும் பொழுது ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை திளைத்தபடி செய்ய இயலாது பணிபுரியும் இடத்தில் பதற்றம் உருவாகும் உயர் அதிகாரிகள் உங்களிடம் வேலைப்பளுவை சுமத்துவர். அதனால் ஈகப் பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றலாம். வரன் முடிவானாலும் திருமணம் தாமதப்படும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளிடம் கவளமுடன் நடத்துகொள்வது நல்லது.
மடக ராசியில் சஞ்சரிக்கும் சுகரன், ஆனி 21-ந் தேதி (5.7.2006) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கும். அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் சுக்ரன். அவர் லாப வீட்தானத்திற்கு வரும்போது திடீர் வரவும், திடீர் செலவும் ஏற்படும். வெளிநாட்டில் வசித்து குடியுரிமைக்காக காத்திருந்தவர்களுக்கு. இப்போது அது கிடைக்கலாம். தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு. அதற்கான வாய்ப்பு வந்துசேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். இடமாற்றம் உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.
ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீள ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவதால், குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாகும். பிள்ளைகளாலும் பிரச்சினைகள் வரலாம். குருவின் பார்வை சனியின் மீது பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ஒரு பிரச்சினை முடிந்தால் அடுத்த பிரச்சினை தலைதூக்கும். உங்கள் ராசிக்கு 3, 8, 12 ஆகிய இடங்களில் எளியின் பார்வை பதிகிறது. எனவே முன்னேற்றப் பாதையில் சில இடையூறுகள் வந்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களின் பிரச்சினைகளை முக்கிய நபர்கள் சிலர் நீர்த்து வைக்க முன்வருவர். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுயதொழில் தொடங்கும் சூழ்நிலை உருவாகும். இக்காலத்தில் சனி பகவானை வழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்களைப் பெற இயலும் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டு முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும் கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். உங்கள் பெயரிலேயே இடம். பூமி வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:
ஜூன்: 16, 17, 20, 21, 26, 27, ஜூலை: 3, 4, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டிலேயே சஞ்சரிக்கிறார். அஷ்டம லாபாதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். தன - பஞ்சமாதிபதியான குரு உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்டகாரியங்கள் வெற்றியாகும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். முக்கிய நபர்கள் வீடு தேடி வந்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவர். பார்க்கும் குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தலைமை பதவிகளும் தானாக தேடி வரும். கல்யாணக் கனவு நனவாகும்.
ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று செவ்வாய், ரிஷப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கும். 6-ம் இடத்திற்கும் அதிபதியான அவர், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதால் ஒப்பற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. தொட்டது துலங்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தென்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாடகை கட்டிடத்தில் இருக்கும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். சந்தர்ப்பங்கள் அனைத்தும் சாதகமாக அமையும்.
கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும் விதம் அமையும். அதிகாரிகள் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள்.
ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம்பெறும் பொழுது. உடன்பிறப்புகளின் அனுசரிப்பு குறையும். சிலருக்கு ஊர் மாற்றம், வீடு மாற்றம் உருவாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை தக்க வைத்துக்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 2, 7, 11 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. உச்ச குருவின் பார்வை பெற்ற சனி என்பதால், இக்காலத்தில் நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். சுப விரயங்கள் அதிகரிக்கும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காணும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். வியாபாரம் மற்றும் தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு அடுக்கடுக்காக ஒப்பந்தம் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 17, 18, 19, 23, 24, 29, 30, ஜூலை: 5, 6, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்