வழிபாடு

திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமை திருவிளக்கை ஏற்றி வழிபட்டால்...

ஆடி மழைக்காலத்தின் தொடக்கமாகும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

ஆடி மழைக்காலத்தின் தொடக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.

திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்.

இந்த ஆண்டு ஜூலை 21, 28, ஆகஸ்டு 4, 11-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை வருகிறது. மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

அதே போல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால் பெண்களின் ஜாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.