பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்தி தரும். அதே நேரம் சகாய ஸ்தானத்தில் அதற்கு அதிபதியான புதன் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி உண்டு. புனிதப் பயணர்கள் அதிகரிக்கும் இடம் வாங்குவது, வீடு கட்டுவது, எட்டிய வீட்டை விரிவு செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது 'அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருக்கிறதே" என்று கவலைப்பட வேண்டாம். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் அவரது பார்வை பலனால் நற்பலன்கள் கிடைக்கும்.
ஆடி 15-ந் தேதி (31.7.2026) அன்று வடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைந்திருப்பதால் சந்தர்ப்பங்கள் அனைத்தும் சாதகமாக அமையும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். உங்கள் ராசிக்கு 3,6 ஆகிய இடங்களுக்கு புதன் அதிபதியாவதால் உடன்பிறப்புகளின் வழியில் நன்மை கிடைக்கும் அரசல் புரசல்களாக இருந்த அண்ணன் நம்பிகள் ஒற்றுமையாகச் செயல்படுவர். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதோடு சம்பள உயர்வும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களிடம் இணக்கமாக நடந்துகொள்வர்.
ஆடி 18-ந் தேதி (1.8.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கும். அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தாதைதில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளின் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். ஊர்மாற்றம் இடமாற்றம் உறுதியாகலாம். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பலநாட்களாக பேசிப் பேசி தள்ளிப்போன வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். கூட்டுத் தொழிலில் இருந்து விலகித் தனித்தொழில் தொடங்க முற்படுவீர்கள். பூமிகாரகன் செவ்வாய் என்பதால் பூமி சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும் தைரியமும், நன்னம்பிக்கையும் கொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும்.
கன்னி- சுக்ரன்
ஆடி 17-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 2, 7ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது நல்லதல்ல. பணப்புழக்கத்தில் தடை ஏற்படலாம் வரவேண்டிய தொகை தாமதப்படும். குடும்பத்தில் பழைய பிரச்சினை தலைதூக்கும் வாசல் தேடிவந்த வரன்கள் மீண்டும் திரும்பிச் செல்லலாம் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் தாமதம் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபமும், விரயமும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குசசு பணியாளர்களின் ஆதரவு உண்டு கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கலாம் பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வீடு மாற்றம் ஏற்படலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்
ஜூலை: 27, 28, ஆகஸ்டு 1, 2, 7, 8, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம் சிவப்பு.
பராபய வருடம் ஆடி மாதக் கிரக நிலை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 4-ம் இடத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே ககங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். துளசியும், தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த செயலை எளிதில் முடித்து வெற்றி காணபீர்கள். உங்கள் ராசியிலேயே விரயாதிபதி செவ்வாய் இருப்பதால், விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும் என்றாலும் அதைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. உடன்பிறப்புகளின் வழியில் நடைபெறும் சுபகாரியத்தை முன்னின்று நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும்.
ஆடி 15-ந் தேதி (31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைத்து 'புத ஆறித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைந்திருப்பதால் அதில் நன்மைகள் நடைபெறும் உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது, குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். படித்து முடித்து வேளை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். அவர்கள் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் அல்லது பணிபுரிய வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நிறைவேறும்
ஆடி 16-ந் தேதி (18.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய் விரயாதிபதியான அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் அதிகமாகும். என்றாலும் விரயத்திற்கேற்ற பணவரவும் இருக்கும். இடம்,பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகளின் திருமண முயற்சி கைகடும். நீண்டதூரம் பயணம் பற்றிய திட்டம் நடைபெறும். இடமாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை நிறைவேரும் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறித்து நடந்துகொள்வர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் ஓடி வந்து இணைவர். உங்கள் முன்னேற்றம் ஆச்சரியப்படும்படி அமையும். வியாபார முன்னேற்றம் கருதி புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள்.
ஆடி 19-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனான சுக்ரன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதே சமயம் சுக்ரன். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால் பணியில் நிரத்தரம் ஏற்படும். உயர்மட்ட அதிகாரிகளால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் நேரம் இது உடல்நிலையில் கொஞ்சம் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறுவதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முதலில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், இறுதியில் அது சிறப்பாக முடியும். விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப் பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதாமாக அமையும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு சுபர் செய்திகள் வந்துசேரும். சொத்துக்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்-
ஜூலை: 17, 18, 30, 31, ஆகஸ்டு: 2, 3, 10, 11, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம் மஞ்சள்.
பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குரு தன ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்திருக்கிறார். எனவே இல்லத்தில் பல நல்ல சம்பவங்கள் நடைபெறும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சுபச்செய்திகள் வந்துசேரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வத்திலைாவர். அதன்விளைவாக வியாபாரம் விருத்தி அடையும் வீரயச் செவ்வாயின் ஆதிக்கத்தால் சொத்துக்கள் விற்பனையும் புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பும் உண்டு.
ஆடி 15-ந் தேதி (31:7:2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியளோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைவதால் எதிர்பாராத புதிய திருப்பங்கள் ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும் குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியம் நடைபெறும் தொழிலில் புதிய யுத்திகளைக் கையாள்ர்கள் அதன் விளைவாக கடன் சுமை குறையும் நீண்டதூரப் பயணங்களால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்குவர். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, வெளிநாடு சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி கைகூடும்.
ஆடி 16-ந் தேதி (1.8.2026) அன்று உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசிக்குள் அடியெடுத்து வைப்பதால் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். இதுவரை தாமதப்பட்டு வந்த பதவி உயர்வு தானாக வந்துசேரும் வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம் வியாபாரம் வெற்றி நடைபோடும். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று நினைத்தவர்களுக்கு கொடுக்கல்வாங்கல் சீராகும் நேரம் இது முன்னோர்களால் கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்து கிடக்கும் கோவில்களை பராமரிக்கும் முயற்சி கைகூடும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தொழிலில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
கன்னி-சுக்ரன்
ஆடி 13-ந் தேதி 12.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுகரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சுக்ரன் பூரவ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல புதிய முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது, பூமி சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கும் பாசுப்பிரிவினை செய்துகொள்வது மேலும் தாமதப்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் மாற்றத்தால் வேகளை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு வீண்பழி ஏற்படும். பிறரிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும் வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டு கலைஞர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவ-மாணவிகள், கல்வியில் அக்கறை செலுத்துவர, பெண்களுக்கு இல்லத்தில் நல்ல எம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில நிறைவு ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்-
ஜூலை: 19, 20, ஆகஸ்டு: 1, 2, 5, 6, 11, 12, 13, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம் ஆரஞ்சு
பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்க நாளிலேயே உங்கள் ராசி நாதன் சந்திரனும், தனாதிபதி சூரியனும் 'பரிவர்த்தனை யோகம்' பெற்றிருக்கிறார்கள். 12-ம் இடத்தில் புதன் மறைந்திருக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தலைாபம் கிடைக்கும். பரிவர்த்தனை யோகத்தால் செயல்பாடுகளில் வெற்றி ஏற்படும். செல்வச் செழிப்பும், சிறப்பான வாழ்க்கையும் அமையும். 6-ம் இடத்திற்கு அதிபதியாக குரு இருப்பதால் ஒரு சில காரியங்களில் தடை ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். யோகம் தரும் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்ப தால் தொழில் வெற்றி நடைபோடும். தொல்லை தந்த எதிரிகள் விலகிச் செல்வர்.
ஆடி 15-ந் தேதி (31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய போகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைந்திருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், உச்ச குருவோடு இணைவதால் விரயங்கள் சுபவிரயங்களாக மாறும். வீடு மாற்றம், இடமாற்றம் விரும்பியபடி அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிகளில் இருந்து விடுபடுவர். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தேகநலனில் கவனம் தேவை. பிரிந்தவர்கள் இணையும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வரலாம். வீடு கட்டலாமா? வீடு வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள்.
ஆடி 16-ந் தேதி (1.8.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5. 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் மிதுன ராசிக்கு வரும்போது பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறும். 'வாங்கிய இடத்தை விற்று விட்டோமே' என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது மீண்டும் இடம் வாங்கும் யோகம் உண்டு. 'வெளிநாட்டில் குடியுரிமை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது குடியுரிமை கிடைக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்து அனுகூலம் உண்டு. எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்தித்து ஏற்றம் காண்பீர்கள். மதிப்பும். மரியாதையும் உயரும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
ஆடி 17-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மகிழ்ச்சி குறைந்து, ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும். உற்சாகத்தோடு பணிபுரிய முடியாது. தாய்வழி உறவுகளுடன் பகை ஏற்படும். வாகனத்தால் விரயம் உண்டு. சகோதர வர்க்கத்தினர்கள் போர்க்கொடி பிடிப்பர். நிம்மதி குறையாமல் இருக்க வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத மாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு உங்கள் பெயரிலேயே அசையாச் சொத்து வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 17, 18, 22, 23, ஆகஸ்டு: 4, 5, 8, 9, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.