வழிபாடு

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு

நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் மகா தீபாராதனை நடந்தது.

ஆடிமாத சோமவார பிரதோஷம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பிரதோஷ தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல ஆடிமாத சோமவார பிரதோஷ தினமான நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது.

அபிஷேகம்

இதனை முன்னிட்டு மூலவர் வீரட்டானேஸ்வரர் லிங்க திருமேனிக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது.

அர்ச்சனை

பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை நடைபெற்றது. கூடவே சிவனின் வாகனமான நந்திக்கு அபிஷேகம் நடக்கிறது. இவருக்கு பக்தர்களால் வழங்கப்படும் எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் அருகம் புல், பூ சாற்றிய பின்னர் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது.

நந்தி

நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் மகா தீபாராதனை நடந்தது. பின் நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே தரிசின காட்சி காணும் வைபவம் நடந்தது.

பக்தர்கள்

மாலை 6 மணிக்கு உற்சவர் பிரதோஷநாதர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

விளக்கேற்றி வழிபாடு

இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்திக்கடனுக்காகவும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

நகராட்சி

இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜ்குமார், உற்சவதாரர்கள், சிவனடியார்கள், சிவதொண்டர்கள் செய்தனர். நகராட்சி ஆணையாளர் காஞ்சனா துப்புரவு அலுவலர் பொறுப்பு இறையன்பு ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணிகளை செய்தனர்.