வழிபாடு

ஆடி மாத சிறப்பு வழிபாடு

விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி முத்துக்கருப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஆடி மாதம்

தமிழர்களின் வாழ்வோடும் வளத்தோடும் பெருந்தொடர்பு கொண்டவை இந்து சமய வழிபாடுகள். வழிபாடுகளில், ஓரிரு நாட்கள் மட்டுமே அனுசரிக்கப்படும் விசேஷங்கள் அதிகம் உண்டு. ஆனால், ஒரு மாதம் முழுவதும் பெண்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் விசேஷம் என்றால் அது ஆடி மாத அம்மன் வழிபாடு மட்டும்தான்.

ஜோதிடம்

தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கமாக ஆடி மாதம் விளங்குகிறது. தட்சிணாயன புண்ய காலம் என்பது பூஜை, தவம், பிரார்த்தனை போன்றவற்றுக்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது. பொதுவாக, சூரியனை ஆணின் அம்சம் என்றும், சந்திரனை பெண்ணின் அம்சம் என்றும் ஜோதிடம் குறிப்பிடும்.

தாடிக்கொம்பு

தாடிக்கொம்பு காமராஜபுரத்தில்அமைந்துள்ள குங்கும காளியம்மன் கோவிலில் 3வது ஆடிவெள்ளியை முன்னிட்டு தெப்ப உற்சவத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும்கூல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பெண்களுக்கு வளையல், மஞ்சள்-குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி முத்துக்கருப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

முத்தாலம்மன் கோவில்

அகரம் முத்தாலம்மன் கோவிலில் ஆடி மாத 3வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவிலின் அர்ச்சகர் கார்த்திக் சாமி அம்மனின்பிரசாதங்களை வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

கரூர் மகாலட்சுமி கோவில்

திண்டுக்கல்லில் இருந்து கரூர் மகாலட்சுமி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அபிராமி அம்மன்

அதன்படி இந்தாண்டு ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து குரும்ப நாயனார் பாதயாத்திரை குழு சார்பாக பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இருந்து பாதயாத்திரையை மேற்கொண்டனர். இதில் பாதயாத்திரை குழு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.