வழிபாடு

ஆடி மாதத்தில் வரும் முக்கிய விசேஷ, விரத நாட்கள்... முழு விவரம்

அம்மன் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத மாதம் தான் இந்த ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்!

மாலை மலர்

ஆடி மாதத்தை பண்டிகைகளின் தொடக்க மாதம்.. பக்தி மாதம் என்றே சொல்லலாம் ! பூமாதேவி அவதரித்த உன்னத மாதம். அதனால் தான் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும் பண்டிகைகளின் தொடக்க மாதமாகவும் கொண்டாடப்படுகிறது. அம்மன் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத மாதம் தான் இந்த ஆடி மாதம்.

இந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் நாளை மறுநாள் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ந்தேதி வரை உள்ளது. அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷ நாட்கள் என்ன, விரத நாட்கள் என்ன, அவை எந்தெந்த தேதியில் வருகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆடி மாத விசேஷ நாட்கள் :

ஜூலை 24- ஆடி அமாவாசை

ஜூலை 28- ஆடிப்பூரம்,நாக சதுர்த்தி

ஜூலை 29- கருட பஞ்சமி ,நாக பஞ்சமி

ஆகஸ்ட் 03- ஆடிப்பெருக்கு

ஆகஸ்ட் 07- ஆடித்தபசு

ஆகஸ்ட் 08- வரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 09- ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட் 10- காயத்ரி ஜபம்

ஆகஸ்ட் 12)- மகா சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட் 16- கோகுலாஷ்டமி

ஆடி மாத விரத நாட்கள்:

ஜூலை 20 -கிருத்திகை

ஜூலை 21- ஏகாதசி

ஜூலை 22- பிரதோஷம்

ஜூலை 23- சிவராத்திரி

ஜூலை 24- அமாவாசை

ஜூலை 28- சதுர்த்தி

ஜூலை 30- சஷ்டி

ஆகஸ்ட் 05- ஏகாதசி

ஆகஸ்ட் 06- பிரதோஷம்

ஆகஸ்ட் 08- திருவோணம்,பெளர்ணமி

ஆகஸ்ட் 12- சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட் 14- சஷ்டி

ஆகஸ்ட் 16- கிருத்திகை

ஆடி மாத அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்கள்:

ஜூலை 17-அஷ்டமி

ஆகஸ்ட் 01-அஷ்டமி

ஆகஸ்ட் 16-அஷ்டமி

ஜூலை 18-நவமி

ஆகஸ்ட் 02-நவமி

ஜூலை 18-கரி நாட்கள்

ஜூலை 26-கரி நாட்கள்

ஆகஸ்ட் 05-கரி நாட்கள்

ஜூலை 27 ஆம் தேதி வாஸ்து நாள். அன்றைய தினத்திற்கான வாஸ்து நேரம் காலை 07.44 முதல் 05.20 வரை .

2025 ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் அமைந்துள்ளது. இதனால் இந்த வருடம் நாம் 2 ஆடி கிருத்திகை கொண்டாட இருக்கிறோம்.