மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும் வாரம். வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிகிறது. வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானம் வலுப்பெறுகிறது. தடைபட்ட பத்திரப் பதிவுகள் நடக்கும். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. தொட்டது துலங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரம் அமோகமாக நடக்கும்.
சிறு சில்லரை வணிகம், கூட்டுத் தொழில் செய்பவர்கள், தங்கம் மற்றும் மஞ்சள் வியாபாரிகளுக்கு, வண்டி, வாகன டீலர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். இன்னும் இரண்டு மாத காலங்களுக்கு மட்டுமே லாப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருக்கும் என்பதால் வராகடன்களை வசூலிக்க முயற்சி செய்வது நல்லது 5.4.2026 அன்று மாலை 5.28 முதல் 8.4.2026 அன்று அதிகாலை 5.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். தினமும் சிவபுராணம் படிக்கவும்
ரிஷபம்
அந்தஸ்து உயரும் வாரம். 2,5ம் அதிபதி புதன் ராகுவுடன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். கற்பனை சக்தி, சாத்வீக குணம், எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். சித்தப்பா, மூத்த சகோதர உதவியால் பல நல்ல காரியங்கள் நடக்கும். மாணவர்கள் பாடங்களை அக்கறையுடன் படிக்க வேண்டும். திருமண விஷயங்கள் சித்திக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
தடைபட்ட பணிகள் துரிதமாகும். செல்வாக்கு சொல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணம், பதவி என்று வாழ்க்கை செழிப்பாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். 8.4.2026 அன்று அதிகாலை 5.54 முதல் 10.4.2026 அன்று மாலை 6.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. தினமும் சிவ கவசம் படித்து சிவனை வழிபடவும்.
மிதுனம்
திருப்புமுனையான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் நின்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். புத்தி சாதுர்யத்தால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். நடக்குமா என்று இருந்த காரியங்களை தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர்நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். புதிய நட்புக்களால் ஆதாயம் உண்டாகும். வழக்கறிஞர்,
அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும். பயணங்களால் வெற்றி உண்டாகும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். எதிரிகள் விலகுவார்கள். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 10.4.2026 அன்று மாலை 6.04 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரை வழிபடவும்.
கடகம்
மன வலிமை அதிகரிக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சனியுடன் சேர்க்கை பெறுகிறார். அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும். சிலர் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் கூட்டுச் சேர்ந்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான பணம் எதிர்பாராத இடங்களில் இருந்து கிடைக்கும்.
நிலம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது நல்ல முன்னேற்றம் தரும். மாணவர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. தள்ளிப் போன திருமணம் காரியங்கள் கூடி வரும். ஆரோக்கியம் சீராகும். உலவுகின்ற கிரக நிலை வியாபாரத்திற்கு ஓரளவு உதவிகரமாக இருக்கும். புதிய தொழிலுக்காக விண்ணப்பித்த லைசென்ஸ் கிடைக்கும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். கேள்விக்குறியாக இருந்த பல குழப்பங்கள் விலகும். தத்தாத்ரேயரை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406