தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும்.தைரியம் மிகுதியாக இருக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும்.நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும்.தொழில் கடன்கள் குறையத் துவங்கும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும்.புத்திர பிராப்த்தம் ஏற்படும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம்.குடும்ப சூழல் காரணமாக ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் பாதிப்புகள் அகலும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் வழங்கவும்.
முத்தாய்பான முன்னேற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதை தென்படும்.ஆன்ம பலம் பெருகும். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான சாதகமான பலன்களும் நடக்கும். வேற்று இனத்தவரின் ஆதரவு கிடைக்கும்.பண வரவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை சுய ஜாதகப் பரிசீலனைக்குப் பிறகு செய்யவும். அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். இன்னல்கள் குறையும். புதன்கிழமை பாசி பருப்பு பாயாசம் தானம் வழங்கவும்.
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு செவ்வாயின் பார்வை உள்ளது. பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இழப்பு ஊதியக் குறைப்பு, அதிக வேலை போன்றவற்றால் அதிருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். 10ல் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பதால் சுய ஜாதக நேரம் அறிந்து தொழில் வேளையில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். கோட்சாரம் சற்று சுமாராக இருக்கும் போது பிரச்சனையை விட்டு ஒதுங்கி வாழப்பழகினால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த கெடு பலனும் ஏற்படாது. 15.6.2026 அன்று காலை 8.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பதால் அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொலைதூர பயணங்களை தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் தானம் வழங்கவும்.
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாயின் எட்டாம் பார்வையும் உச்ச குருவின் ஐந்தாம் பார்வையும் ராசிக்கு உள்ளது.இது விபரீத ராஜயோக அமைப்பாகும். சிலருக்கு மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும் அல்லது வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு. வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம்.சிலர் வாகனத்தை மாற்றலாம்.குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பழைய கதை பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும். ஆன்லைன் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் உயரும்.15.6.2026 அன்று காலை 8.41 முதல் 17.6.2026 அன்று காலை 8.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் உத்தியோகம் சம்பந்தமான பய உணர்வு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்களை குறைத்தாலே பெரிய பிரச்சனை எதுவும் வராது என்பதை உறுதியாக கூறலாம். செவ்வாய்க்கிழமை பருப்பு சாதம் தானம் வழங்கவும்.