குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாயின் 4ம் பார்வை சுக ஸ்தானத்தில் உள்ள உச்ச குருவின் மேல் இந்த ஒரு வாரத்திற்கு மட்டுமே உள்ளது. இந்த குருமங்கள யோக அமைப்பால் பொன் பொருள் சேரும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். மனதில் நல்ல ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் இது உகந்த காலமாகும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். ஆடம்பர மோகம், ஆசை அதிகமாகும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இதுவரை கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவர். பூர்வ ஜென்ம புண்ணியப்படி இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பீர்கள். செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் வழங்கவும்.
வெற்றிகரமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தில் உள்ள உச்ச குருவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இதற்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும். திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். பணவசதி சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். குடும்ப செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகையாகும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். திருமண வயதில் உள்ள மகன் மகளின் திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும். வெள்ளிக்கிழமை வெள்ளை மொட்சை தானம் வழங்கவும்.
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுகிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட சோதனைகள் குறையும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். காதலால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். குல இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். புதிய தொழில், கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம். அதிர்ஷ்டம் மற்றும் ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும்.திருமணத் தடை அகலும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும் .வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள், ஆதாயம் கிடைக்கும்.காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும்.எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். புதன்கிழமை பச்சைபயிறு தானம் வழங்கவும்.
முன்னேற்றமான வாரம்.ராசியில் குரு சுக்ரன் சேர்க்கை உள்ளது. தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.மனஉறுதி, தைரியம், நேர்மறை எண்ணம்,உதவி செய்யும் மனப்பான்மை கூடும். கடமைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள்.ஆயுள் ஆரோக்கியம் கூடும்.மருத்துவ செலவுகள் குறையும்.கௌரவ பதவிகள் உறுதியாகும்.பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் .புத்திர பிராப்த்தம் உண்டாகும்.பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். பாகப் பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.திங்கட்கிழமை பச்சரிசி தானம் வழங்கவும்.