சிம்ம ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் லாபாதிபதி புதனுடனும், சுக்ரனுடனும் இணைந்து சஞ்சரிக்கிறார். இதனால் 'புத ஆதித்ய யோக'மும். 'புத சுக்ர யோக'மும் உருவாகிறது. அந்த நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் உண்டு, புதிய திருப்பங்கள் ஏற்படும். வருமானம் ஒரு மடங்கு வந்தால் விரயம் இருமடங்கு ஆகலாம். எனவே சுபச்செலவுகளை மேற்கொள்வது நல்லது.
மிதுன-சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம் நான். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பால் நன்மை காண்பீர்கள். பொருளாதாரத்தில் நன்மை ஏற்படும் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள்.
மிதுன-புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். தொழில் வெற்றிநடைபோடும். எதிர்காலத்தைப் பற்றிய மளப்பயம் அகலும் 'இதுவரை கொடுத்ததை வாங்க முடியவில்லையே, வாங்கியதை கொடுக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, கொடுக்கள் வாங்கல்கள் ஒழுங்காகி மனநிம்மதியைக் கொடுக்கும். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப இயலாதவர்கள். பொழுது தாய்நாடு திரும்ப வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கடக-சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரக சேர்க்கையின் காரணமாக சகோதர வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். தொழில் மாற்றம் பற்றி சித்திப்பீர்கள் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு, உத்தயோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாற்றம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு கிட்டும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும், கலைஞர்களுக்கும் கவனம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் சகப் பணியாளர்களின் ஆதர கிட்டும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை.
இம்மாதம் அனுமன் வழபாடு ஆனந்தம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.
கன்னி ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், விரயாதிபதி சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். 10-ல் குரு சஞ்சரிப்பதோடு, தற்சமயம் கண்டகச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகிறது. எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் மாற்றங்களும், மனக்கலக்கங்களும் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு வரும் வரை, பொறுமையாகச் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதாரத்தில் திருப்தி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மிதுன-சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பாக்கிய ஸ்தானத்திற்கும், தன ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும், கொடுத்த வாக்கைக்காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரலாம்.
மிதுன-புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று புதன், தனது சொந்த வீடான மிதுன ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதனும் புதன் என்பதால் இக்காலம் ஒரு இனிமையான காலமாக அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். முக்கியமான நபர்கள், உங்களின் கூட்டாளியாக மாறுவர். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். உங்கள் பெயரிலோ, உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரிலோ சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
கடக-சுக்ரன்
வைகாசி 26-த் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2.9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் குருவோடு இணைந்து இருப்பதால் திடீர் மாற்றங்கள் வந்துசேரும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியம் தருவதாக அமையும். வியாபாரத்தில், பிரபலமானவர்கள் சிலர் வாடிக்கையாளர்களாக மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சில சலுகைகளைப் பெறுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முதல்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். சுபவிரயம் உண்டு.
இம்மாதம் சனீஸ்வரர் வழிபாடு சந்தோஷம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
துலாம் ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவரோடு புதனும், சூரியனும் இணைந்து சஞ்சரிப்பதால் 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் உருவாகின்றது. ஏழரைச் சனி விலகி விட்டதால் இனி எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். இருப்பினும் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும்.
மிதுன-சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், இப்பொழுது 9-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும், முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். பாக்கிய ஸ்தானம் பலம்பெறுவதால் இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைத்தாலும், அது நினைத்தபடியே நன்மை தரும் விதம் அமையும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
மிதுன-புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரித்து சுக்ரனோடு இணையும் இந்த நேரம் நல்ல நேரம்தான். பாக்கிய ஸ்தானத்தில் புதனும், சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. அயல்நாட்டு முயற்சி ஆதாயம் தரும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.
கடக-சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி.க்கள் உங்களது வாடிக்கையாளர்களாக மாறுவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் நேரமிது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், புகழ் கூடும். மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். தம்பதியர்களின் ஒற்றுமை பலப்படும். பொருளாதார நிலை உயரும்.
இம்மாதம் குரு வழிபாடு குதூகலம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.
விருச்சிக ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய். சொந்த வீடான மேஷத்தில் பாக்கியாதிபதி சந்திரனுடன் கூடி சஞ்சரிக்கிறார். எனவே 'சந்திர மங்கள யோகம்' ஏற்படுகிறது.
மேலும் சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் சூரியன் சஞ்சரிப்பதால் 'புத சுக்ர யோகமும். 'புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. மே மாதம் 26-ந் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப உச்சம் பெற்ற குருவின் பார்வையால் உன்னதமான பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
மிதுன-சுக்ரன்
வைகாரி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாமாவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜயோக அடிப்படையில் எதிர்பாராத விதத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குறிப்பாக பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து அதன்மூலம் உதிரி வருமானங்கள் வந்துசேரும். தொழில் வளர்ச்சி உண்டு.
மிதுன-புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம் லாபாதிபதியானவர் புதன். மறைத்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும் என்பதால் பொருளாதார பற்றாக்குறை அகலும் புதிய பாதை புலப்படும். ஒரு சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த மங்கல நிகழ்ச்சிகள், இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மாற்றப்பட்ட பொறுப்புகள் நல்ல பொறுப்பாக அமையும். உத்தியோகத்தில் புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும் 'அயல்நாடு சென்று பணிபுரிய வேண் டும்' என்று விரும்பியவர்களுக்கு இப்பொழுது எடுக்கும் முயற்சி கைகூடும். பெருமாள், லட்சுமி வழிபாடு மேலும் பெருமை சேர்க்கும்.
கடக-சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2926) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தாலத்தில் சஞ்சரிக்கும் பொழுது நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொட்டது துலங்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர் கைகொடுத்து உதவுவர். என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபம் தரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமை பொறுப்புகள் வந்துசேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ மாணலிகளுக்கு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
இம்மாதம் கலைவாணி வழிபாடு காரிய வெற்றிக்கு வித்திடும். மகிழ்ச்சி தரும் வண்ணம். ஆவந்தா நீலம்.