பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார் அவரோடு பலம்பெற்ற சுக்ரனும் இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம்' உருவாகின்றது. அதுமட்டும் அல்லாமல் புதனும் அங்கு இணைந்து சஞ்சரிப்பதால் புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. இத்தனை விதமான போகமும் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதமாகவே அமையும். இருப்பினும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருக்கிறது. எனவே மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கூடும் ஜென்ம குருவும் இம்மாதம் வரப்போவதால் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு இளம்புரியாத கவலைளய உருவாக்கும் ராகு-ரேது மற்றும் குருவிற்குரிய வழிபாடுகளை முறையாகச் செய்தால் தடைகள் அகல வழிபிறக்கும்.
மாதத் கொடக்கத்தில் பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3ந்தேதி தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்து, பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் செல்ல இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 5. 7. ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. 3-ம் இடத்தை குரு பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைகிறது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் கல்யானாக கனவுகளை நனவாக்குவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் பார்க்கும் குருவைப் பலப்படுத்த குருகவசம் பாடி வியாழக்கிழமை தோறும் குருவை வழிபட்டால் நல்லது நடக்கும்.
குருவின் பார்வை 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் திருமணத் தடை அகலும் வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். ஊர் மாற்றத்தையோ, வீடு மாற்றத்தையோ எதிர்பார்த்தும் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும் வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவமார்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஒளிமயமான எதிர் காலம் உருவாக வழிபிறக்கும் உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று 6-ம் இடமான ரோக ஸ்தானத்திற்குச் செல்கிறார். இதன் விளைவாக எதிர்பாராத பல மாற்றங்கள் வந்துசேரும் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அங்கு சஞ்சரிக்கப் போகிறார் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடமான 6-ம் இடத்திற்கு ராகு வரும் பொழுது மறைமுக எதிர்ப்பு அதிகரிக்கும். திறமை மிக்கவர்களாக நீங்கள் இருந்தாலும் சில காரியங்களைச் செய்ய இயலாமல் போகலாம். செலவு கூடும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறப்புகளை வழங்கி உங்களை சோதித்துப் பார்ப்பார்கள்.
விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் வீரயங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்கலாம். வீடு கட்டுவது. வீடு வாங்குவது போன்றவற்றில் அக்கறை செலுத்துவது நல்லது. புதிய கூட்டாளிகளால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகச் சுற்றுலாவை மேற்கொள்வீர்கள். சொத்துக்களால் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு தடைகள் அகலும் மாணவ- மாணவிகளுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும் பெண்களுக்கு எதிர்பாரப்புகள் நிறைவேற குடும்பத்தினர் களை அனுசரித்து செல்வது நல்லது. பணியிட மாற்றம் உண்டு.
பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சுக்ரனோடும், சூரியனோடும் இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் புத சுக்ர யோகமும், புத ஆதிதிய போகமும் உருவாகின்றது. நீச்சபங்க ராஜயோகமும் ஏற்படுவதால் இந்த மாதம் ஒரு பொன்னான மாதமாகும். பொருளாதாரத்தில் உச்சநிலையை அடையும் மாதமாகவும் அமையப்போகின்றது. குருப்பெயர்ச்சியும். ராகு-கேது பெயர்ச்சியும் தன்மையை வழங்கும்.
மாதத் தொடக்கத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-ந் தேதி (30.10.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 4. 6. 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து சிறப்பான பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் 4-ம் இடத்தை குரு பார்ப்பதால் இடம், பூமியால் லாபம் கிடைக்கும் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். தாய்வழி ஆதரவு உண்டு, பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குருவின் பார்வை 6. 8 ஆகிய இடங்களில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அகலும், ரண சிகிச்சை செய்யாமல் சாதாரண சிகிச்சையிலேயே நோய்கள் குணமாகும். பிறர் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும், சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க முயல்வீர்கள். பாகப்பிரியினை சாதகமாக அமையும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழி அகலும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய மனப்பயம் அகலும், 'உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே. வேறு இடம் மாறலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பார்ந்த மாற்றம் வந்துசேரும்.
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். அங்கு அவர் ஒன்றரை ஆண்டு காலம் தங்கி இருக்கும் பொழுது பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலைமாறும், உத்தியோகத்தில் ஏற்படும் மாறுதல் திருப்தி தராது. மாறுதலாகி சென்ற இடம் மனதிற்கு பிடிக்காமல் மீண்டும் பழைய இடத்திற்கே வரும் சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் முன்னோர் கட்டி வைத்து சிதிலமடைந்த ஆல உங்களை மீண்டும் புதுப்பிக்கும் யோகம் உண்டு.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் ஆதரவோடு நல்ல காரியங்களைச் செய்வீர்கள், வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள், வெளிநாட்டு முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். ஆண்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஒப்பந்தங்கள் வரும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பர். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பன உயர்வு பற்றிய தகனம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மானை- மாணவிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும், மதிப்பெண் அதிகம் பெற்று பாராட்டுக் குவியும். பெண்களுக்கு இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே பலம்பெற்று சஞ்சரிக்கிறார். அவரோடு சஞ்சரிக்கும் சூரியன் நீச்சம் பெறுகிறார். எனவே "நீச் சபங்க ராஜயோகம்' உருவாகின்றது. மேலும் உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே 'புத ஆதித்ய யோகம்', 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும் மாதம் இது.
மாதத் தொடக்கத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரித்து வந்த குரு பகவான், ஐப்பசி 3-6 தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வகர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து அதற்குரிய பலன்களை வாரி வழங்கப்போகிறது. குருவின் பார்வை சகாய ஸ்தானத்தில் பதிவதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கப்போகிறது. முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். முக்கியப் புள்ளிகள் உதவிகரமாக இருப்பர். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். முக்கியப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். உடன்பிறப்பு கள் உறுதுணையாக இருப்பர்.
குருவின் பார்வை 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் பிள்ளைகளின் திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். மேலதிகாரிகள் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பர். நீண்டதூரப் பயணங்கள் பலன் தரும். பிறருக்குப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும், உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு. 13.11.2026 அன்று 4-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இதை 'அர்த்தாஷ்டம ராகு' என்று சொல்வார்கள். அங்கு சுமார் ஒன்றரை ஆண்டு காலங்கள் சஞ்சரித்து தங்கி இருக்கும் பொழுது புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்கிக்கொள்ள இயலும். கடல் தாண்டிச் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க முன்வருவீர்கள். தொழிலை விரிவு செய்ய போதுமான மூலதனம் கிடைக்கும். 'சுட்டிய வீட்டை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வீடு வாங்கும் யோகம் உண்டு.
10-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவால் தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். எதிரிகள் விலகுவர். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. தனித்தியங்கும் ஆற்றல் ஏற்படும். கூட்டாளிகளை விலக்கிவிட்டு தானே முன்னின்று தொழிலை நடத்த முன்வருவீர்கள். சொந்தக் கட்டிடத்திற்கு தொழிலை மாற்றுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடம். பூமி விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவர். வெளிநாட்டு முயற்சி கைகூடும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் நாடிவரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் குவியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு வசதிகள் பெருகும். மாணவ மாணவிகளுக்கு பாராட்டும், பரிசும் கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டிற்கும், புகுத்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் பெற்று, அங்கு உச்சம் பெற்ற குருவோடு சேர்ந்து நீச்ச பங்க ராஜயோகத்தை உருவாககுகிறார். எனவே தொட்டது துலங்கும். தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. குரு பார்க்க கோடி நன்மை என்பதால் மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் படியான செயல்கள் நடைபெறும். 10-ம் இடத்தில் குரு வந்ததும் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். ராகு-கேதுக் களின் பெயர்ச்சி காலம், ஒரு அற்புதமான காலமாக அமையப்போகிறது.
மாதத் தொடக்கத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-ந் தேதி (30.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதா ரத்தில் நிறைவு ஏற்படும். குடும்ப முன்னேற்றம் கூடும். உடன்பிறப்புகள் பக்கபலமாக இருப்பர். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். பிரப லஸ்தர்களின் பெயர் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறும்விதம் நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும்.
குருவின் பார்வை 4. 6 ஆகிய இடங்களில் பதிவதால் அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். கடன் சுமை குறைய வழிபிறக்கும். எதிரிகள் உதிரிகள் ஆவர். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் குரலுக்கு மேலதிகாரிகள் செவிசாய்த்து உயர் பதவிகளை வழங்குவர். நாலாபுறமும் இருந்து நல்ல தகவல் கிடைக்கும் நேரம் இது.
உங்கள் ராசிக்கு இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று 3-ம் இடம் எனப்படும் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வருகிறார். அங்கு ஒன்றரை ஆண்டுகள் தங்கி இருந்து வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வர வழிவகுத்துக்கொடுப்பார். அர்த்தாஷ்டம ராகு விலகிவிட்டது என்பதால் இளி நற்பலன்கள் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகும். நாமதித்து வந்த பல காரியங்கள் இனி தடையின்றி நடைபெறும். சேமிப்பு அதிகரிக்கும். செல்வநிலை உயரும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவி தானாக வரலாம்.
9-ல் சஞ்சரிக்கும் கேதுவால் ஒளிமயமான எதிர்காலம் அமையும். பொன், பொருள் சேரும். புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்துசேரும். நாட்டுப்பற்றுமிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக விளங்குவர். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும், புகழ்மிக்கவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெறும். நாகரிகப் பொருட்களை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். அனணன் தம்பிகளுக்குள் இருக்கும் அரசல் புரசல்கள் அகலும். புதிய வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். விவாகப் பேச்சுக்கள் முடிவாகும்.