அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்களை இயற்றினார்.
ஒரு சமயம் விஜய நகர மன்னர் பிரபுட தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார். அப்போது, மன்னரின் நம்பிக்கைக்கு உகந்த புலவரான சம்பந்தாண்டான், பாரிஜாத பூவைக் கொண்டு சிகிச்சை செய்து வந்தால், கண்பார்வை திரும்ப கிடைக்கும். இந்தப் பணியை அருணகிரிநாதரே செய்ய வல்லவர் என கூறினார்.
மன்னரும் இதை ஏற்று, அருணகிரிநாதரை உடனே பாரிஜாத பூவைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.
பாரிஜாத பூ சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால், ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார்.
உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்திவிட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்பந்தாண்டானது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.
தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாததால் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தர் அனுபூதி முதலான பாடல்களை இயற்றினார்.
கிளி உருவத்திலேயே கோபுரம் மேல் அமர்ந்து நிறைய பாடல்கள் பாடினாராம். அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று. இந்தக் கிளி கோபுரம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.