முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் தன, லாப அதிபதி புதனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். அன்னதானம், தானதர்மம் செய்வதில் ஆர்வம் அதிகமாகும். சிலருக்கு தர்ம ஸ்தாபனம், அறக்கட்டளைகள் போன்றவற்றில் கவுரவ பதவிகள் கிடைக்கும். பெயர் புகழ் பரவும் வகையில் நல்ல காரியங்கள் செய்வீர்கள். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு, தொழில் ஆதாயம் உண்டு. தொழிலுக்கு தாய், தந்தையின் உதவி கிடைக்கும்.
உங்களைப் கெடுக்க நினைத்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு தொழிலில் சிந்தித்து செயல்பட வேண்டும். பெண்கள், யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது. சிலருக்கு கவுரவப் பேராட்டத்தால் உடன் பிறந்தவர்களுடன் பகை உருவாகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.
சுப விரயம் ஏற்படும் வாரம். கண்டகச் சனியின் காலம் என்பதைத் தவிர பிற அனைத்து கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் கன்னி ராசிக்கு மிகச்சாதகமாக உள்ளது. தெளிவான சிந்தனை உண்டாகும். பணப் பிரச்சனைகள் நீங்கும். தொழில் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். அரசு உத்தியோக வாய்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் நிலவிய பல விதமான குறைபாடுகள் சீரடையும்.
பேச்சாற்றலால் உங்களின் காரியங்களை சாதிக்க முடியும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் தேடி வரும். குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். சிலருக்கு குழந்தைகளால் மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கிறோம்.
குடும்ப உறவுகளிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் கூடும். ஆடம்பரச் செலவை குறைத்தால் சேமிப்பு கூடும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை முறையாக அனுபவிக்க முடியாத அளவுக்கு தடை தாமதங்களும் ஏற்படலாம். திருப்பதி வெங்கடாஜலபதியையும் பத்மாவதி தாயாரையும் வழிபடவும்.
புத்திக்கூர்மையுடன் செயல்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சத்ரு ஜெயம் உண்டாகும். எதிரிகளை வெல்லக்கூடிய வலிமை உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி கூடும். தொழில் போட்டியாளர்களை புறமுதுகு காட்டி ஓட வைப்பீர்கள். சிலர் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடலாம்.
எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சிலர் தொழிலுக்காக தூர தேசம் செல்லலாம். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி தரும். சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக செயல்படவும். பறவைகளுக்கு தானியமும், தண்ணீரும் வழங்கவும்.
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாய், தந்தை வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவோடு சில பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. பொருளாதார பற்றாக்குறை அகலும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்தி நாணயத்தை காப்பாற்ற இயலும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு தொகையை வங்கியில் சேமிப்பீர்கள்.
நல்ல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு திருமண முயற்சி செய்வது நல்லது. பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். சனிக்கிழமை அனுமன் சாலிசா கேட்கவும்.