சீனிவாசமங்கபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி 
ஆன்மிகம்

சீனிவாசமங்கபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில் வசந்த உற்சவம் நிறைவு

சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் கடந்த 29-ந் தேதி தொடங்கி நடந்து வந்த வசந்த உற்சவ விழா நிறைவடைந்தது.

மாலை மலர்

சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் கடந்த 29-ந் தேதி வசந்த உற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் விழா நடைபெற்றது. 3-வது நாளான நேற்று நிறைவு விழா நடந்தது. காலையில் தோமலசேவா, கொலு, பஞ்சாங்க ஸ்ரவனம் மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை வெங்கடேஸ்வர சாமி, சீதாராம லட்சுமணர், அஞ்சனேயர், ருக்மணி, சத்தியபாமா சமேத கிருஷ்ணர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் கோவில் துணை செயல் அலுவலர் சாந்தி, உதவி செயல் அலுவலர் தனஞ்சயுடு, கண்காணிப்பாளர் செங்கல்வராயலு ஆகியோர் கலந்து கொண்டனர்.