அம்பிகை வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படலாம். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.
தொழிலில் லாபம் கிடைக்கும் நாள், தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.
பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
வருமானம் உயரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதுமுயற்சிகளில் வெற்றி உண்டு. புனிதப் பயணங்களை மேற்கொள்ள விரும்புவீர்கள்.
சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும், தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் பலன் உண்டு.
பராசக்தி வழிபாட்டால் பலன் பெற வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்கள் போன் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. வருமானம் திருப்தி தரும்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வரலாம்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். விரயம் கூடும்.
குடும்பச்சுமை கூடும் நாள். மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும். சேமிப்பு கரையும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி தாமதப்படும்.