வரவு திருப்தி தரும் நாள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் சம்பந்தமாகப் பயணம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம்.
நிதி நிலை உயரும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிட்டும்.
சுபவிரயம் ஏற்படும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உறவினர்களின் மனக்கசப்பு மாறும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்ய முன்வருவீர்கள். உறவினர்களிடம் இருந்த உரசல் மாறும்.
யோகமான நாள். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். இடமாற்றம் நன்மை தரும்.
காரிய வெற்றி ஏற்படும் நாள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சந்திக்கும் நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்கவேண்டாம். மேலதிகாரிகளின் பகை அதிகரிக்கும்.
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். ரொக்கத்தால் வந்த பிரச்சினை அகலும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உருவாகும். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும்.
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். செயல்பாடுகளில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.