ராசிபலன் இன்றைய ராசிபலன்
ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 23.8.2026 - சிம்மம் ராசிக்காரர்களே உஷார்..!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

ரிஷபம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். திடீரெனச் செலவுகள் அதிகரிக்கலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.

கடகம்

நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

சிம்மம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் பிரச்சினை ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் மனஅமைதி குறையும்.

கன்னி

இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேகநலன் கருதி தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

துலாம்

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.

விருச்சிகம்

பாராட்டும், புகழும் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

தனுசு

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.

மகரம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

கும்பம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.

மீனம்

வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். பிரச்சினைகளைச் சமாளிக்கப் பிறரிடம் ஆலோசனை கேட்பீர்கள்.