ஆன்மிகம்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 9.8.2026: இவர்களுக்கு வரவு திருப்தி தரும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மேஷம்

பற்றாக்குறை அகலும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.

ரிஷபம்

வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்

எண்ணங்கள் ஈடேறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.

கடகம்

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழிலில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

கன்னி

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.

விருச்சிகம்

சிந்தித்துச் செயல்பட வேண் டிய நாள். சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. வரவைவிட செலவு கூடும். மற்றவர்களின் பிரச்சனையில் தலையிட வேண்டாம்.

தனுசு

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மகரம்

அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்

நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். இடமாற்றம், எதிர்பார்த்தபடி அமையும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும்.

மீனம்

தடைகள் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.