ஆன்மிகம்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 22.9.2026: இந்த ராசிக்காரர்களுக்கு உடல் நலனில் கவனம் தேவை

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மேஷம்

முன்னேற்றம் கூடும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.

ரிஷபம்

புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

மிதுனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் உண்டு. உடல் நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

கடகம்

வரவைவிடச் செலவு கூடும் நாள். நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

சிம்மம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

கன்னி

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். உத்தியோக நலன் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

துலாம்

சொத்துகளில் வளர்ச்சி கூடும் நாள். எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. மாற்று இனத்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.

விருச்சிகம்

வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

தனுசு

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

மகரம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி மாறும். வரன்கள் வாயில் வந்து சேரும்.

கும்பம்

சுபவிரயம் ஏற்படும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும், அயல்நாட்டு அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.

மீனம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையில் வரலாம்.

SCROLL FOR NEXT