ஆன்மிகம்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 13.9.2026: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மேஷம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சுபச்செய்திகள் வீடு தேடி வரும். உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்

ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

மிதுனம்

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவர்.

கடகம்

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். ஆற்றல் மிக்கவர்கள் காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

கன்னி

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். பயணத்தால் கையிருப்புக் கரையும்.

துலாம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்

பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை கிட்டும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

நல்லது நடக்கும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.

மகரம்

யோகமான நாள். எடுத்த காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

வரவை விடச் செலவு கூடும் நாள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள்மீது குறை கூறுவர். பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மீனம்

நினைத்தது நிறைவேறும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் சிக்கல் தீர வழிகாட்டுவர். உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

SCROLL FOR NEXT