அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
செல்வாக்கு உயரும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் அளிக்கும்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கும்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீட்டுப் பராமரிப்புச் செலவு கூடும். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்பப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரியும் ஒருவரால் நன்மை ஏற்படும்.
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடல் நலம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தடைபட்ட காரியம் இன்று தானாக நடைபெறும்.
திடீர் திருப்பம் ஏற்படும் நாள். கோபத்தில் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும்.
முன்னேற்றம் கூடும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.
பகை நட்பாகும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மறதியால் விட்டுப் போன காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.