ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 9.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் குதூகலப் பயணம் உண்டு.

ரிஷபம்

வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவர். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழிலில் லாபம் உண்டு.

மிதுனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.

கடகம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குடும்பத் தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் தொல்லை உண்டு.

சிம்மம்

முன்னேற்றம்கூட முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

வெற்றிச்செய்திகள் வீடு வந்து சேரும் நாள். திடீர்ப் பயணம் தித்திக்க வைக்கும். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். வருமானம் உயரும்.

துலாம்

வரவைவிடச் செலவு கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோக முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியத்தை திட்ட மிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

தனுசு

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

மகரம்

பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்க முன் வருவீர்கள். வாக்குவாதம் செய்தவர்கள் விலகிச்செல்வர்.

கும்பம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நடைபெறாது.

மீனம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும். பணவரவு உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

SCROLL FOR NEXT