ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 6.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமணத்தடை அகலும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்

முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். உறவினர்களிடமிருந்து விமர்சனங்கள் வரலாம்.

கடகம்

பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். செல்வாக்கு மிக்கவர்கள் சிநேகமாவார்கள்.

சிம்மம்

வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

கன்னி

பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். புதிய உத்தியோகத்திற்கு விண்ணப்பிக்கலாமா என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

துலாம்

வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் வெற்றி நடைபோடும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகவே இருக்கும்.

விருச்சிகம்

நினைத்தது நிறைவேறும் நாள். பிரார்த்தனைகள் பலிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். அரசு வேலைக்கு செய்த முயற்சி பலன் தரும். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு

அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு. திருமணத்தடை அகலும்.

மகரம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும்.

கும்பம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். கூட்டாளிகளால் பிரச்சனை உண்டு. உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

மீனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். விரயங்கள் உண்டு.

SCROLL FOR NEXT