முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாகப் பயணம் ஒன்று ஏற்படும்.
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். திறமை பளிச்சிடும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வரலாம். உதிரி வருமானங்கள் கிடைக்கும்.
வருமானம் உயரும் நாள். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவு பெறும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
தொழில் வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும். குடும்பத் திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் பிரச்சனை ஏற்படும்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் சம்பந்தமாக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.
மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். எளிதில் முடிக்க நினைத்த காரியம் தாமதப்படும்.
வருமானம் உயரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம்.