ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

தொழில் வளம் மேலோங்கும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

வருமானம் திருப்தி தரும் நாள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும்.

மிதுனம்

உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகலாம். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

சிம்மம்

தடைகள் அகலத் தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாட்டால் அனுகூலம் உண்டு.

கன்னி

வீடு மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

துலாம்

வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

விருச்சிகம்

பெருமைகள் சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

தனுசு

வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வரன்கள் முடிவாகும்.

மகரம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல்நலத்தில் கவனம் தேவை.

கும்பம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறதியால் சில காரியங்களை செய்ய இயலாமல் போகலாம். பொறுப்புச்சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும்.

மீனம்

சுபவிரயம் ஏற்படும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் வருமானம் தரக்கூடியதாக இருக்கும்.

SCROLL FOR NEXT