ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 31.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வரன்கள் முடிவாகும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

யோகமான நாள். பண நெருக்கடி அகலும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

ரிஷபம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மிதுனம்

விரயங்கள் ஏற்படும் நாள். வீடு மாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது.

கடகம்

தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்

உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர். வருமானம் உயரும்.

கன்னி

அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

துலாம்

புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

தனுசு

யோகமான நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மகரம்

அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். வரன்கள் முடிவாகும்.

கும்பம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.

மீனம்

சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். நேற்றையப் பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் கேட்டபடி கிடைக்கும்.

SCROLL FOR NEXT