ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.10.2026 - இந்த ராசிக்காரர்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

சுபச்செய்தி வந்து சேரும் நாள். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் உயரும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். செய்தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு.

மிதுனம்

தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

கடகம்

எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களால் விரயம் உண்டு.

கன்னி

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடலாம்.

துலாம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

தனுசு

வந்த வரவைவிட செலவு கூடும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை ஏற்படும்.

மகரம்

தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு கிடைக்கும். செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள்.

கும்பம்

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

மீனம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

SCROLL FOR NEXT