ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

யோகமான நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும்.

ரிஷபம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணத்தை போராடி வாங்குவீர்கள். பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படலாம்.

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

கடகம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

சிம்மம்

கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பயணம் பலன் தரும். உத்தியோகப் பிரச்சினை அகலும்.

கன்னி

பொருளாதாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச்செய்தி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

துலாம்

காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் உறுதியாகலாம்.

விருச்சிகம்

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வித்திடும்.

தனுசு

வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும்.

மகரம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்குவீர்கள்.

கும்பம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மீனம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வீடு மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.