ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 26.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார விருத்தி உண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

வரவை விடச் செலவு கூடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும்.

ரிஷபம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்ட படியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.

மிதுனம்

ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கடகம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமணப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.

கன்னி

நட்பு பகையாகும் நாள். கடமையில் தொய்வு ஏற்படும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

துலாம்

திறமை பளிச்சிடும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உத்தியோகத்தில் வாழ்க்கைத்துணை பணிபுரியுமிடத்திற்கே உங்களுக்கு மாறுதல் கிடைக்கும்.

விருச்சிகம்

யோகமான நாள். வருமானம் உயரும். புகழ்பெற்றவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவோடு நல்ல காரியம் நடைபெறும்.

தனுசு

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வரன்கள் முடிவாகும். சொத்துகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரலாம். வியாபார விருத்தி உண்டு. கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

கும்பம்

யோகமான நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.

மீனம்

வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

SCROLL FOR NEXT