ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 25.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உறவினர்கள் கைகொடுத்து உதவுவர். உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

ரிஷபம்

செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

மிதுனம்

உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகலாம்.

கடகம்

யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

சிம்மம்

கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுப்பர்.

கன்னி

வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

துலாம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணிச்சுமை கூடும்.

விருச்சிகம்

செல்வாக்கு உயரும் நாள். செய்த காரியங்களில் வெற்றி கிட்டும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர்.

தனுசு

வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். உடன் இருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

மகரம்

வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

கும்பம்

வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

மீனம்

சுபவிரயம் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

SCROLL FOR NEXT