ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 21.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெற்று தொழில் தொடங்குவோமா என்று சிந்திப்பீர்கள்.

ரிஷபம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நாவன்மையால் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் குறுக்கீடுகள் அகலும்.

மிதுனம்

மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வாகனம் மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

கடகம்

நினைத்தது நிறைவேற்றும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சிம்மம்

தொட்ட காரியம் துளிர்விடும் நாள். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கன்னி

விடா முயற்சிக்குவெற்றி கிட்டும் நாள். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

துலாம்

முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி சிறப்பாக முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குணமறிந்து செயல்படுவது நல்லது.

தனுசு

இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

மகரம்

செல்வாக்கு உயரும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உறுதியாகலாம்.

கும்பம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

மீனம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும்.