ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.7.2026 - இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

கனவுகள் நனவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்

செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்த்துக் கொள்வீர்கள்.

மிதுனம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். புதிய முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உத்தியோக மாற்றம் உண்டு.

கடகம்

இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

சிம்மம்

வேகத்துடனும் விவேகத்துட னும் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும்.

கன்னி

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

துலாம்

வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

வருமானம் உயரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

தனுசு

மனக்ககலக்கம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

பிரச்சினையில் இருந்து விடுபடும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அனுபவ அறிவால் அற்புதமான பலனைக் காண்பீர்கள்.

கும்பம்

காரிய வெற்றிக்கு கவனம் தேவைப்படும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும்.

மீனம்

தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும், செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைப்பொறுப்புகள் தானே தேடி வரும்.