ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வரவு இருமடங்காகும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்வர்.

ரிஷபம்

துயரங்கள் துள்ளி ஓடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள்.

மிதுனம்

எதிர்பாராத வரவால் இனிமை சேரும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரும். உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

கடகம்

வரவு இருமடங்காகும் நாள். பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டமொன்றைத் தீட்டுவீர்கள்.

சிம்மம்

அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப்பாதை புலப்படும்.

கன்னி

முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

துலாம்

யோகமான நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

விருச்சிகம்

காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

தனுசு

நல்ல தகவல் கிடைக்கும் நாள். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்திலிருந்த இடையூறுகள் அகலும்.

மகரம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நேர்மறைச் சிந்தனை தேவை. திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

கும்பம்

நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள்.

மீனம்

வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும்.