ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 16.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

ரிஷபம்

கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.

மிதுனம்

நெருக்கடி நிலையை சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். உடல் நலம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தவும்.

கடகம்

யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உதிரி வருமானங்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கொடுத்த பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் ஏற்படலாம். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் தொல்லை உண்டு. வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது.

தனுசு

யோகமான நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியலாமா என்று சிந்திப்பீர்கள்.

கும்பம்

வாழ்க்கைத்தரம் உயரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

மீனம்

எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.