ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 14.10.2026 - இந்த ராசிக்காரர்கள் துணிந்து எடுத்த முடிவால் நன்மை கிடைக்கும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். எந்தச் செயலையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு.

ரிஷபம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பிறர் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

மிதுனம்

சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். அலுவலகத்தில் அருகில் உள்ளவர்களின் ஆதரவு திருப்தி தரும்.

கடகம்

வசதிகள் பெருகும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

சிம்மம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். ஆரோக்கியத்திற்காகச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

துலாம்

வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வங்கிச் சேமிப்பு உயரும். உத்தியோக ரீதியாகச் செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும். வரன்கள் வாயில் தேடி வரும்.

விருச்சிகம்

அலைபேசியில் வரும் செய்திகளால் ஆனந்தம் அடையும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

தனுசு

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொழிலில் இருந்த தேக்கநிலை மாறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

மகரம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கும்பம்

வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவால் நன்மை கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகப் பிரச்சனை அகலும்.

மீனம்

இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

SCROLL FOR NEXT