வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
புதிய பாதை புலப்படும் நாள். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.
யோகமான நாள். நீங்கள் சந்திக்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடிவரலாம். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிரியமான சிலரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். நீண்ட தூரப் பயணம் கைகூடும். எதிர்பாராத தனலாபம் உண்டு.
திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
நினைத்தது நிறைவேறும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். நீண்ட நாளைய பிரச்சனை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.
உடல் ரீதியான உபாதைகளால் உற்சாகம் குறையலாம். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதால் சிலரின் அதிருப்திக்கு ஆட்படலாம்.
தடைகள் அதிகரிக்கும் நாள். எந்தவொரு காரியத்தையும் யோசித்து செய்வது உத்தமம். பணத்தைக் கையாளுபவர்களுக்கு கவனம் தேவை.
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.