மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்கள் எளிதில் முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழில் தொடர்பாக பயணங்கள் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். எடுத்த முயற்சி வெற்றி தரும்.
யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய செய்தி உண்டு.
துணிச்சலோடு செயல்படும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டு. உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
தொட்டது துலங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பணத்தேவைகளை பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும் நாள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வந்து சேரலாம். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.
முன்னேற்றம் கூடும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். உடன்பிறப்புகள் உதவி உண்டு.