ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இடம் வாங்கும் முயற்சி கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உங்களின் நிர்வாகத் திறமைக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

ரிஷபம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

மிதுனம்

சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். வீடு, வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

கடகம்

இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

சிம்மம்

ஆதாயம் தரும் தகவல் அலைபேசி வழியில் வரும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் நேற்று உருவான பிரச்சனை இன்று தீரும்.

கன்னி

மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி உண்டு. வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள்.

துலாம்

வாங்கிய கடனை கொடுத்து மகிழும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பதவியில் உள்ளவர்களால் உதவி கிட்டும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

விருச்சிகம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். நிலம் சம்பந்தமான பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும்.

தனுசு

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

மகரம்

தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். பெற்றோரின் பாச மழையில் நனைவீர்கள்.

கும்பம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். எடுத்தோம், முடித்தோம் என்று எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள்.

மீனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் வாடும்.