ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 செப்டம்பர் 2026: இருக்கன்குடி மாரியம்மன் பவனி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-23 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திரயோதசி நண்பகல் 12.33 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 4.03 மணி வரை பிறகு மகம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலகாபிஷேகம்

மாத சிவராத்திரி. திருச்செந்தூர், பெருவயல் கோவில்களில் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம். அதிபத்த நாயனார், புகழ்துணை நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம். விருதுநகர் சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சனம்.

கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலகாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாக நாத சுவாமி சிறப்பு அபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் பால் அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - மாற்றம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - கீர்த்தி

கடகம் - லாபம்

சிம்மம் - நட்பு

கன்னி - அனுகூலம்

துலாம் - தாமதம்

விருச்சிகம் - சுகம்

தனுசு - வரவு

மகரம் - பயணம்

கும்பம் - உண்மை

மீனம் - உழைப்பு

SCROLL FOR NEXT