பராபவ ஆண்டு, புரட்டாசி-22 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 9.52 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : உத்திரம் இரவு 10.20 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : சித்த / அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
விஷசஸ்த்திர ஹத பிதுர் மஹாளயம். மாத சிவாராத்திரி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.
மேஷம் - உற்சாகம்
ரிஷபம் - போட்டி
மிதுனம் - வெற்றி
கடகம் - முயற்சி
சிம்மம் - உயர்வு
கன்னி - பணிவு
துலாம் - வரவு
விருச்சிகம் - இன்பம்
தனுசு - யோகம்
மகரம் - கடமை
கும்பம் - உண்மை
மீனம் - கண்ணியம்