ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 மே 2026: வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பவனி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-24 (வியாழன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி காலை 8.21 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : பூராடம் காலை 4.45 வரை பிறகு உத்திராடம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்

தேய்பிறை சஷ்டி விரதம். ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் ரதோற்சவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அன்பு

ரிஷபம் - ஆதரவு

மிதுனம் - ஆக்கம்

கடகம் - உதவி

சிம்மம் - நட்பு

கன்னி - லாபம்

துலாம் - உண்மை

விருச்சிகம் - வரவு

தனுசு - லாபம்

மகரம் - பக்தி

கும்பம் - சாதனை

மீனம் - உயர்வு