ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 ஜூன் 2026: சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-24 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி இரவு 11.12 வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : சதயம் மறுநாள் விடியற்காலை 5.26 வரை பூரட்டாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி 1.30 மணி

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி

சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி காலை பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - மாற்றம்

ரிஷபம் - ஜெயம்

மிதுனம் - ஆதரவு

கடகம் - சாந்தம்

சிம்மம் - ஓய்வு

கன்னி - களிப்பு

துலாம் - வரவு

விருச்சிகம் - தாமதம்

தனுசு - உயர்வு

மகரம் - பணிவு

கும்பம் - சாதனை

மீனம் - பண்பு