ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 ஏப்ரல் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-24 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி பிற்பகல் 3.50 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : கேட்டை மறுநாள் விடியற்காலை 4.54 மணி வரை பிறகு மூலம்

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் அபிஷேகம்

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் காலையில் வெள்ளிப் பல்லக்கில் பவனி. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் பூத வாகன பவனி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பாற்குடக் காட்சி. இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-நலம்

மிதுனம்-புகழ்

கடகம்-உயர்வு

சிம்மம்-முயற்சி

கன்னி-லாபம்

துலாம்- நன்மை

விருச்சிகம்-சுகம்

தனுசு- பரிசு

மகரம்-சாந்தம்

கும்பம்-யோகம்

மீனம்-அமைதி