ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 செப்டம்பர் 2026: அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-20 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி இரவு 6.57 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : திருவாதிரை இரவு 8.06 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரத்திலும் இரவு சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமாள் உருகுசட்டச் சேவை. திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர் உற்சவாரம்பம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூடப் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடையநாயகி, காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - போட்டி

ரிஷபம் - நன்மை

மிதுனம் - மேன்மை

கடகம் - மகிழ்ச்சி

சிம்மம் - களிப்பு

கன்னி - உவகை

துலாம் - ஈகை

விருச்சிகம் - பரிசு

தனுசு - ஆர்வம்

மகரம் - அனுகூலம்

கும்பம் - புகழ்

மீனம் - உயர்வு

SCROLL FOR NEXT