ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 ஆகஸ்ட் 2026: ஆடி கிருத்திகை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-21 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அஷ்டமி மாலை 4.09 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம் : பரணி இரவு 6.18 வரை பிறகு கார்த்திகை

யோகம் : சித்த / மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்சவாரம்பம்

கார்த்திகை விரதம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்சவாரம்பம், பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் மகாலட்சுமி அலங்காரம், பின் பூத வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. வேலூர் கோட்டை ஸ்ரீ துர்கையம்மன், பட்டீஸ்வரன் ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.

சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பெருமை

ரிஷபம் - பொறுப்பு

மிதுனம் - பொறுமை

கடகம் - இன்பம்

சிம்மம் - உற்சாகம்

கன்னி - நலம்

துலாம் - அமைதி

விருச்சிகம் - புகழ்

தனுசு - சுபம்

மகரம் - பாசம்

கும்பம் - துணிவு

மீனம் - போட்டி