ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 5 செப்டம்பர் 2026: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உற்சவாரம்பம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-19 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : நவமி இரவு 9.21 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 9.44 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவாரம்பம்

பாஞ்ச ராத்திர ஸ்ரீ ஜெயந்தி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவாரம்பம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் உற்சவாரம்பம் இரவு மூஷிக வாகனத்தில் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - தெளிவு

ரிஷபம் - புகழ்

மிதுனம் - ஆக்கம்

கடகம் - விவேகம்

சிம்மம் - உயர்வு

கன்னி - போட்டி

துலாம் - உண்மை

விருச்சிகம் - தெளிவு

தனுசு - நலம்

மகரம் - வரவு

கும்பம் - மேன்மை

மீனம் - உண்மை

SCROLL FOR NEXT