ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 5 ஜூன் 2026: மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-22 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி இரவு 10.45 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : திருவோணம் பின்னிரவு 3.43 வரை பிறகு அவிட்டம்

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்

திருவோண விரதம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் அலங்காரம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பக்தி

ரிஷபம் - அமைதி

மிதுனம் - தாமதம்

கடகம் - களிப்பு

சிம்மம் - உவகை

கன்னி - பக்தி

துலாம் - பணிவு

விருச்சிகம் - பண்பு

தனுசு - ஊக்கம்

மகரம் - உண்மை

கும்பம் - பரிசு

மீனம் - உறுதி