ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள் - 5 ஆகஸ்ட் 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-20 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி இரவு 6.09 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : அசுவினி இரவு 7.32 வரை பிறகு பரணி

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி

சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெரு விழா, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் உற்சவாரம்பம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் உற்சவாரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - வரவு

கடகம் - உதவி

சிம்மம் - சுபம்

கன்னி - வாழ்வு

துலாம் - கவனம்

விருச்சிகம் - நலம்

தனுசு - முயற்சி

மகரம் - லாபம்

கும்பம் - ஜெயம்

மீனம் - புகழ்