ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 5 ஏப்ரல் 2026: சங்கடஹர சதுர்த்தி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-22 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திருதியை காலை 11.51 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : விசாகம் இரவு 11.49 மணி வரை பிறகு அனுஷம்

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சங்கடஹர சதுர்த்தி, அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

இன்று சங்கடஹர சதுர்த்தி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி நவநீத சேவை, தெப்போற்சவம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக் கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஜெயம்

ரிஷபம்-அன்பு

மிதுனம்-அமைதி

கடகம்-ஆதரவு

சிம்மம்-சாந்தம்

கன்னி-கீர்த்தி

துலாம்- ஆக்கம்

விருச்சிகம்-நட்பு

தனுசு- களிப்பு

மகரம்-தாமதம்

கும்பம்-வெற்றி

மீனம்-கவனம்